பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஒ. புலவர் கா. கோவிந்தன்

காட்டிய கண்ணகி, கோவலன் தன்னைக் கைவிட்டு, மாதவி மனை புகுந்துவிட்ட அந்நிலையே ஒப்பனை செய்து கொள்ளும் உணர்வையே இழந்துவிட்டாள். காலில் கிடந்து கலீர் கலீர் என ஒலித்த சிலம்பைக் கழற்றி எறிந்தாள். இடையில் மெல்லாடைக்கு மேல் அணிந்திருந்த மணிமேகலையை மறந்தாள். தொய்யிற் கோலத்தை அவள் மார்பு மறந்தது. மங்கல அணி ஒன்றைத் தவிர்த்துப் பிற அணிகள் அனைத்தையும் அகற்றிவிட்டாள். காதில் குழை இல்லை. முகத்தில் பொலிவு இல்லை. கண்களில் அஞ்சனம் இல்லை. நெற்றியில் திலகம் இல்லை. வாயில் புன்னகை இல்லை. கூந்தலுக்கு நெய் இட மறந்தாள். -

"அம் செஞ் சீறடி அணி.சிலம்பு ஒழிய,

மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்; மங்கல அணியிற் பிறிது அணி மகிழாள்; கொடுங்குழை துறந்து வடிந்துவிழ் காதினள் திங்கள் வாண் முகம் சிறுவியர் பிரியச் செய்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்; பவள வாள்நுதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப மையிரும் கூந்தல் நெய்யணி மறப்பக்

கையறு நெஞ்சத்துக் கண்ணகி."

- - சிலம்பு. 4 : 47-57.

தன் அழகும் பொலிவும் கணவன் கண்டு களிக்கவே அல்லது தனக்குப் பெருமைதர அன்று; அவை கண்டு களிக்க வேண்டத் தக்கன்று எனக்