பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இ. புலவர் கா. கோவிந்தன்

"தாய்போல் கழறித் தழிஇக் கோடல்

ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப."

என்பது தொல்காப்பியர் வகுத்த விதிமுறை.

கூறிய இக்குணத்திலும், கண்ணகி குறையுடை யவள் அல்லள். கணவன் செய்த பிழையைச் சுட்டிக் காட்டிய முறையும், சுட்டிக்காட்டத் தேர்ந்து கொண்ட காலமும் களனும் எண்ணி எண்ணி மகிழ்தற்கு உரியவாம். .

இடையர் சேரியில் மாதரி மனையில், தன் கையால் ஆக்கிய அறுசுவை உணவு உண்டு அமர்ந்திருந்த கோவலன் அருகில் இருந்து வெற்றிலை பாக்குச் சுருள்களை மடித்துக் கொடுத்துக் - கொண்டிருந்தாள் கண்ணகி. - அந்நிலையில் தன் னுடைய தகா வொழுக்கத்தால் தன் குடிக்கு வந்துற்ற இழுக்கையும் கேட்டையும் நினைந்து உளம் கலங்கிய நிலையில், நான் இத்தனை கொடியோன் ஆகவும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், புறப்படு எனச் சொல்லிய உடனே புறப்பட்டுவிட்டனையே? கண்ணகி, உன்னுடைய இந்தச் செயலை அறியாமை எனக் கொள்வனோ? அல்லது உன் பெருமைக்குச் சான்று எனக் கொள்வனோ?" எனக் கூறி வருந்தினான். அதுகேட்ட கண்ணகி, கோவலன் உள்ளம் மாசுமறு அற்று உளது: நல்ல அறவுரைகளை ஏற்கும் பக்குவம் பெற்றிருக்கிறது; ஆகவே, அவனுக்கு ஏதேனும் அறவுரை கூறவேண்டுமாயின், அதற்கு இதுதான் ஏற்ற