பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 149

பருவம்; இப்போது எவ்வளவு கசப்பான அறவுரைகளையும், அவன் காதுகள் ஏற்றுக்கொள்ளும் - என உணர்ந்தாள். அதனால், அவன் செய்த பிழையைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கத் தொடங்கினாள்; மனைவி, கணவனுக்கு ஒரு நல்ல நண்பன் ஆவாள்; நண்பனின் தலையாய கடமை, தன் நண்பன் தவறு செய்த வழி, நகைத்து அதற்கு உடன்பாடு அளிப்பது அன்று; மாறாக, கடுஞ்சொல் வழங்கியேனும், தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவதாகும். அதைச் செய்ய முனைந்தாள் கண்ணகி.

அவ்வாறு முனைந்த அந்நிலையிலும், அவன் பிரிவால் தான் பெரிதும் துயர் உற நேர்ந்திருந்தாலும், அதைச் சுட்டிக் காட்டுவதால் கேடு ஒன்றும் இல்லை என்றாலும், அதுவே தன் நோக்கமாம் என்றாலும், அவன் தன் பிழை உணர்ந்து உள்ளம் துடிக்கும் இந் நிலையில், அவனால் தனக்கு வந்துற்ற இடர்ப் பாடுகளை எடுத்துக் கூறிக் கண்டிப்பது கூடாது ←TöT உணர்ந்தாள்; அதனால், தனக்கு உண்டான இழப்புகளைக் கூறாமல், இருவரும் கூடி நடாத்த வேண்டிய இல்லறக் கடமைகளுக்கு நேர்ந்த கேடுகளை, அதனால் அவனைப் பெற்ற தாய் தந்தையர்களுக்கு உண்டான துயர்நிலைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் வழியே தனக்கு உண்டான துன்ப நிலைகளைக் கூறாமல் கூறிச் சுட்டிக்காட்டி இடித்துரைக்க எண்ணி GðTfTGHT.