பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 இ. புலவர் கா. கோவிந்தன்

மனைவி தன் கணவனைக் கண்டிக்க முடியாது; அதைச் செய்து முடித்துவிட்டாள் கண்ணகி; ஆனால், அக்குற்றச்சாட்டில் அன்பைக் குழைத்து, தன்னலத்தை மறைத்து, அதே நிலையில் கடுமையை மிகுத்து எத்துணைத் திறமையாகச் செய்து முடித்துள்ளாள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, "தாய் போல் கழறித் தழுவிக்கோடல் வேண்டும்” என்ற தொல் காப்பியர் விதித்த விதிமுறைகளை எவ்வாறு அடியொற்றிச் சென்றிருக்கிறாள் என்பதை எண்ணி எண்ணி மகிழுமாறு செய்யும்.

"தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதி காரமிதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் நிதம்

ஒதி யுணர்ந்தின் புறுவோமே" - மலரும் மாலையும்