பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் & 15

அனைவரும், ஆண் இனத்தின் வேறுபட்ட பெண் இனத்தவராவர்; அதிலும், நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உணரமாட்டா மடந்தைப் பருவம் வாய்ந்த மடவராவர்; பாராட்டிய அவர்கள்தாம் மடவார் என்றால், அப்பாராட்டையாவது, ஆடவர் முன்னிலை யில் மேற்கொண்டனரா என்றால், அதுவும் இல்லை; தம்போலும் மடவமகளிர் குழாத்திடையேதான் பாராட்டினர்; அப்பாராட்டும், அம்மடவார், அவன் மீது கொண்டிருக்கும் அளவிறந்த காதலின் விளைவாதலின், அத்துணைப் பெருமையும் அவன்பால் குறைவறக் குடிகொண்டிருக்கும் எனக் கூறுவதற்கில்லை; அக்காதலும், அவன் பெற்றிருந்த காமனை நிகர்க்கும் உடல் அழகு ஒன்றின் விளைவேயல்லது வேறு அன்று.” என்ற இவைபோலும் சிறுமைகளே புலப்படப் பாடிவிட்டு, கண்ணகியின் பண்புகளைப் பாராட்டுங்கால், "திருமகளின் ஒப்புயர்வற்ற உருவநலம் இவள் உருவ நலமாம், தீதிலா வடமீன் எனப் புகழ்ந்து பாராட்டும் அருந்ததியின் திறம் இவள் திறமாம்" என மாதர்குலப் பெருந்தகையார் பலரும் பாராட்டித் தொழத்தக்க பண்புடையாள்; கண்ணகி எனும் அழியாப் பெயருடையாள் எனக், "கண்ணகி, உடல் நலம், உயிர் நலம் ஆகிய இருநலங்களையும் ஒருங்கே பெற்றவள் அவளை அவள்போலும் பெண்களே பாராட்டினர்; பாராட்டிய பெண்கள், பாராட்டற்காம் ப்ருவமோ பெருநிலையோ வாய்க்கப்பெறாப் பேதைப் பருவத்தவரல்லர்: மகளிரிற்