பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஒ. புலவர் கா. கோவிந்தன்

சிறந்த மாதரார் எனப் பாராட்டத்தக்கவராவர்; அம்மாதர்ப் பெருந்தகையாரும், அவள்ை வறிதே பாராட்டுவதோடு அமைதி கண்டார் அல்லர்; அவள் குணநலப் பெருமைகண்டு, அவளைக் கைகூப்பித் தொழுவதும் செய்தனர்” என்ற இவைபோலும் பெருமைகளே புலப்படப் பாடியுள்ளார்.

பாராட்டும் நிலையில், அடிகளார் மேற்கொண்ட இவ்வேறுபாட்டின் விரைவால், கோவலன்போல் அல்லாமல், கண்ணகி, தன்போலும் மகளிராலேயே பாராட்டப் பெற்றவள் கோவலனைப் பாராட்டியவர் மடவார் என்றால், கண்ணகியைப் பாராட்டியவர்

மாதரார் ஆவர்; அம்மடவார் கோவலனைப் பாராட்டுவது ஒன்றே செய்தனர் என்றால், அம்மாதரார் கண்ணகியைப் பாராட்டுவதோடு

நில்லாது, வணங்கிப் பணிவதும் செய்தனர். கோவலன் உருவநலம் ஒன்றே உடையனாகக், கண்ணகி உருவநலம், உயிர் நலம் இரண்டும் ஒருங்கே உடையவள். கோவலன், காமனாகக் காட்சி அளித்தால், கண்ணகி கற்புத். தெய்வமாகக் காட்சி அளித்தாள். கோவலன் புகழ், மண்ணில் தேய்வுறத் தக்கதாக, கண்ணகி புகழோ நிலைபேறுடையதாகும் என்ற இவ்வேறுபாட்டுநிலை, விளக்கமுறத் தேர்ன்றக் கோவல்ன் புகழ் மடுவுள் தாழ்ந்து மறைந்து போகக் கண்ணகி புகழ், மலை உச்சிக்கு இவர்ந்து மங்கா ஒளி காட்டுவ்தாயிற்று.

இவ்வாறு நிலவுலகின் நீள்முடியில் வைத்துப் பாராட்டும் பெருமையுடையளாகக் கண்ணகியைப்