பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 19

மணந்து, மனையறம் மேற்கொண்டு வாழும் இளைஞர்கள், தம் ஆடல் பாடல் அழகு முதலாயின கண்டு, தம்பால் வேட்கையுடையராகித் தம்மை வந்தடைந்து தம் பரத்தையர் சேரியிலேயே தங்கிவிட்டமை அறிந்து, அவர்தம் மனைவிமார்கள் பொறாது புலம்புகின்றனர் என்ற செய்தி தம் செவியகம் புகுந்ததும், அக்குலமகளிரைப் "பிள்ளை பெற்றுவிட்ட பாட்டியர்; இவர்களுக்குக் கணவர் தரும் இன்பத்தில் இன்னமும் காதலோ!” என அவர்தம் முதுமையைச் சுட்டிக்காட்டி எள்ளி நகையாடுவதும், “எங்கள் சேரியில் நாங்கள் ஆடும் ஆடல் பாடல் காண ஒருநாள் வந்தான் அவன்; அதற்காக அவன் மனைவி, பாடித்திரியும் பொருநரின் ஓயாது ஓலமிடும் பறைபோல், என்னை வாய் ஒயாது வைகின்றாள் எனக் கேட்டேன். அந்த அளவிற்கு வந்த பிறகும் நான் வாளா இருப்பனோ? அவனை என் கை வலைக்குள் அகப்படுத்திக் கொள்ளத் துணிந்துவிட்டேன்; அதற்கான வழிவகைகளைக் காண்பதிலேயே நிற்கும் என் சிந்தையும் செயலும்:

"மண்கனை முழவொடு மகிழ்மிகத் துரங்கத் தண்துறை ஊரான் எம் சேரி வந்தென. அவைபுகு பொருநர் பறையின், ஆனாது கழறுப என்ப, அவன் பெண்டிர். கொண்டு கைவிலித்தல் சூழ்ந்திசின் யானே" அகம் 76

"அவனால், நாம் எவ்வளவு பெரிய பழிக்கு உள்ளாக நேரினும் நேரட்டும்; அதன் பயனாம்