பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இ புலவர் கா. கோவிந்தன்

நாண்கேடு நமக்கு ஒரு பொருட்டு அன்று; அவன் நம் - சேரிக்கு வரட்டும்; அவனை, அவன் மனைவி காண, அவள் கண் முன்பாகவே, அவன் மார்பில் மணக்கும் மாலையையும், தோள் மேல் துவளும் மேலாடையையும் பற்றியும், அவன் தோளை என் கூந்தலால் கட்டியும் இழுத்து வந்து, எனக்கே உரியவனாகச் சிறை செய்துகொள்கின்றேன். அது செய்யத் தவறி விடுவேனாயின், அதற்காக என்றே, என் தாய் எனக்கு ஊட்டி வளர்த்திருக்கும் என் பேரழகு பாழுற்றுப் போவதாக!”

"ஊரனொடு ஆவதுஆக இனி நாண் உண்டோ? வருகதில் அம்ம, எம் சேரி சேர! அரிவேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் தாரும் தானையும் பற்றி. தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்து அவன் மார்பு கடிகொள்ளே னாயின். - வருதுக தில்ல யாய் ஒம்பிய நலனே! - அகம். 276.

- "நகரில் நடைபெறும் புனலாட்டு விழா, நகரத்தார் அனைவர்க்கும் பொதுவாகும். இவளும் இவள் கணவனும் அவ்விழாவுக்குச் செல்கின்றனர் என்பதற் காக, நான் அங்குச் செல்லக்கூடாது என்று கூற இவள் யார் கூந்தலில், ஆம்பல் முழுமலரை அப்படியே

வைத்து முடித்தல்போலும் கோலம்கொண்டு புனலாடும் புதுத் துறைக்குப் போக நான் துணிந்துவிட்டேன். ஆங்கு இவள் கணவன், இவளைக் கைவிட்டு, என் அழகில் மயங்கி என்னைத் தேடி