பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 21

வந்துவிடுவன் என்ற அச்சம் இவளுக்கு இருந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும் இவளுக்கு ஆற்றல் இருந்தால் அவ்வாறு நிகழாதபடி அவனைக் காத்துக்கொள்ளட்டும். அது தன் ஒருத்தியால் ஆகாது என்றால், தனக்குத் துணையாகத் தன் தோழிமார் களையும் கூட்டிக்கொண்டு சென்று காத்துக் கொள்ளட்டும்!”

“கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப் பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி, யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது அஞ்சுவது உடைய ளாயின். . கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே.”

- குறுந் 80

என்பன போல்வன கூறித் தம் இளமைச் செவ்வியால் செருக்குற்றுத் திரிவதும், ஊரார் உரைக்கும் பழிச்சொற்களுக்கு அஞ்சிப் பரத்தைமை ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தம் மனை அடைந்து, தம் மனைவியர்பால், தம் பிழை பொறுக்குமாறு வேண்டிக்கொள்ளும் இளைஞர்களை, அதுவரையும் தமக்கே உரியவராகக் கருதியிருந்த அவ்விளைஞர்கள், தம்மைக் கைவிட்டுப் போய்விட்டனரே என்ற காழ்ப்பால், "தோழி! நம் மனையில் நம்மை வயமாக்கவேண்டும் என்பதற்காக 'நான் யார் தெரியுமா? என் ஆற்றலும் பெருமையும் எத்துணைச் சிறந்தன தெரியுமா? எனத் தன் பெருமையை வாய் வலிக்கக் கூறிய அந்த இளைஞன் தன் மனையுள் அடியிட்டதும் கண்ணாடியின்