பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் இ. 25

மேலும், மாதவி வேட்கையெல்லாம் கோவலன் தரும் மாறா அன்பின் மேலதாகாது, அவன் தரும் மாநிதியின் மேலதாயின், தன் அன்பில் குறைகாணு வதற்காம் சிறுவாய்ப்பும் அவனுக்கு அளிக்காதவாறு பழகுதல் வேண்டும் என்பதில் அவள் பெரிதும் விழிப்பாயிருந்திருப்பள். தான் வெறுப்படையத்தக்க சொல்லும் செயலும் அவன்பால் தோன்ற, تقنيالگيl காரணமாகத் தன் உள்ளத்தில் அவன்மீது வெறுப் புணர்ச்சி தலைதுாக்கியபோதும், அதை அவனறியா வாறு மறைத்துக்கெர்ண்டு, அவனுக்கு மலர்ந்தமுகமே காட்டிப் பொய்ந்நாடகம் ஆடியிருப்பள். ஆனால், அத்தகு அறைபோகு எண்ணம் அவள்பால் இல்லாமை யாலும், தனக்கு வேண்டுவது அவன் பொன் அன்று. அவன் அன்பு அறாமையொன்றே என்ற எண்ணமே யுடைமையாலும், கடற்கரையில், அவன் பாடிய கானல்வரிப் பாட்டுக் கேட்டதன் விளைவாய்த் தோன்றிய, அவன் அன்பு அயலாள் ஒருத்திமீது சென்றுளதுபோலும் என்ற ஐயப்பாட்டுணர்வையும், அவளால் தாங்கிக்கொள்வது இயலாதாயிற்று. அம்மட்டோ! அவன், தன் காதலன், ஆகவே, தனக்கே உரிய அவன், அதுபோலும் கருத்துடையனாதலைக் கண்டித்துத் திருத்தும் உரிமை தனக்கும் உண்டு என் உளமார நம்பினாள். அதனாலன்றோ, "மனைவிமார் மாண்புடையராதல் கணவன்மார் கெடுவழி செல்லாமையால் அன்றோ?' என்ற அறவுரையை,