பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஒ. புலவர் கா. கோவிந்தன்

"மருங்குவண்டு சிறந்தார்ப்ப

மணிப்பூவாடை அதுபோர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி

நடந்தாய் வாழி! காவேரி! கருங்கயற்கண் விழித்தொல்கி

நடந்தவெல்லாம் நின்கணவன் திருந்துசெங்கோல் வளையாமை

அறிந்தேன் வாழி! காவேரி!!"

என்ற கானல்வரிப் பாட்டில் வைத்து அறிவுறுத்தினாள். அந்த உரிமை உணர்வு அவளுக்கு இல்லையாக, அவள் உள்ளம் அவன் தரும் மாநிதி ஒன்றையே எண்ணியிருந்திருக்குமாயின், "அவன் யாது கூறினும் கூறுக! அவனுக்கு என்பால் வெறுப்புண்டாக்கும் வெஞ்சொற்களை நான் வெளியிடேன்; அது எனக்குப் பொருளழிவு தருவதல்லது பொருளாக்கம் தாராது; ஆகவே, அது நான் செய்யேன்," எனக் கொண்டு, அவன் உரை கேட்டு உள்ளம் கொதிக்கினும், உரையில் இன்பத்தை இழைத்து. உரையாடியிருப்பள். ஆனால், அவள் அது செய்யாது, அறிவுரை கூறி, அதன் பயனாய், அவனையும் பறிகொடுத்துத் தானும் பாழுற்றுப் போனாள் என்றால், அவள் பத்தினிப் பெண்ணே யல்லது பரத்தைப்பெண் ஆவளோ?

மாதவி ஒரு கணிகையேயாயின், கோவலன் கைவிட்ட நிலையில், அவள் நோக்கமெல்லாம் அவன் தந்த மாநிதிமீது மட்டுமேயாக, அவள், அவன் பிரிவு குறித்துச் சிறிதும் கவலையுற்றிராள். புகார் நகரத்தில்