பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 27

பொருள்வளம் மிகுந்த பெருஞ்செல்வன், கோவலன் ஒருவன் மட்டுமேயல்லன். அவன் போலும் செல்வர் எண்ணற்றவர் வாழும் நகரம் அப்புகார். "உரைசால் சிறப்பின் அரைசு விழை திருவின் பரதர் மலிந்த

பயங்கெழு மாநகர்" (சிலம்பு 2: 1 - ) என்ற, இளங்கோவடிகளார் அளிக்கும் வரலாற்று உண்மையினைக் காண்க.ஆக, அப்படிப்பட்ட செல்வர் மலிந்த மாநகர் வாழ்வினளாகிய அவள்,

"நறுந்தாதுண்டு நயனில்காலை வறும்பூத் துறக்கும் வண்டுபோல்பவளாயின்,” அச்செல்வருள் ஒருவன், அதிலும், அப்போழ்தைய நிலையில், குலம்தரும் வான் பொருள் குன்றைத் தொலைத்துவிட்டு இலம்பாடுற்று இழிந்துவிட்ட ஒருவன் பிரிவு குறித்துச் சிறிதும் கலங்கியிராள்; அதற்கு மாறாக, "தானே பிரிந்து கைவிட்டுப் பிறிதொரு பெருஞ்செல்வன் வருகைக்கு வழிவகுத்துத் தந்தனனே" என எண்ணி மகிழ்ச்சியில் திளைத்திருப்பள். ஆனால், அவள்பால் அப்பரத்தையர் பண்பு அறவே இல்லையாக, பத்தினி மகளிரின் பண்பாடே முழுக்க முழுக்கப் பொருந்தியிருந்தமை யால், அவன் வாராமை கண்டு கையற்ற நெஞ்சோடு கண்துயில் பெறாது கலங்கத் தலைப்பட்டாள். அம்மட்டோ! கோவலனை அடைதல், இனி அறவே இல்லை என்ற நிலையுற்றதும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கை போல்வனவற்றைக் கற்றுத்துறைபோகிய பொற்றொடி நங்கையாம் அந்நல்லாள், அறவன அடிகளை