பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 & புலவர் கா. கோவிந்தன்

அடைந்து, அவர்பால் ஐவகைச் சீலத்து அமைதியும் அறிந்து, துறவு வாழ்க்கையும் மேற்கொண்டு துய்மை நிலை பெற்றாள். என்னே அவள் பெண்மை நலம்!

வயந்தமாலை வழியாக, ஒருமுறை விடுத்த தன் வேண்டுகோளை, ஒரு பொருளாக மதியாமையோடு, "ஆடல்மகளே ஆதலின், ஆயிழை! பாடுபெற்றன அப்பைந்தொடி தனக்கு” எனத் தன் ஒழுக்கத்திற்கும் மாசு கற்பித்து மறுத்துவிட்டான் என்பது கண்டு, கோவலன்பால் சினங்கொண்டு, போனால் போகட்டும் என எண்ணி, வாளா இருந்துவிடாது, அவன் வாராது போயினும் நான் பிழையற்றவன் என்பதையாவது அவன் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும் என்ற உள்ளுணர்வு உடையளாகி, மீண்டும் ஒரு முடங்கல் தீட்டி, அதைக் கோசிகமானிபால் கொடுத்தனுப்பி, "தன் தீது இலள்; என் தீது” எனத் தான் குற்றம் அற்றவள் என்பதைக் கோவலன் உள்ளம் உணரப் பண்ணினாள் என்றால், அவளைப் பிறந்தகுலம் காட்டிப் பழித்து ஒதுக்குவது பொருந்துமோ? - மேலும், தங்கள் நலம் நுகர்ந்த பின்னர்த் தம்மைக் கைவிட்டுச் செல்லும் இளைஞர்களை ஏற்றுக்கொண்டு மனையறம் நடாத்தும் அவர்தம் மனைவியர்பால், மாறாச் சினம் உடையராகி, அவர் மனம் நோகும் வன்சொற்களை வாரிவாரி வாய் வலிக்க இறைப்பதே வழக்கமாகக் கொண்ட பரத்தையர் குலத்தில் பிறந்த மாதவியும், கோவலனை ஏற்றுக் கொண்ட கண்ணகிமீது கடுஞ்சொற்களை விசியிருத்தல்