பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 29

வேண்டும். ஆனால், அவள் அது செய்திலள். அது செய்யாமை மட்டுமன்று. பிறந்த மண்ணை மறந்து, கோவலனைப் பின்தொடர்ந்து, காட்டு வழிகளை இரவில் கடந்து, கடுந்துயர் உற்ற அவள் நிலையை எண்ணி எண்ணிக் கண்ணிர் சொரிந்து கலங்கினாள். கண்ணகி, அவ்வாறு காடு புகுந்து கடுந்துயர் உறுவதற்குத் தானே காரணமாயிருப்பாளோ என எண்ணி, எரியின் இழுதாய் உள்ளம் உருகினாள் என்றால், அவளைக் காதற்செல்வி எனக் கொண்டு கைகூப்பித் தொழுதல் வேண்டாவோ?

- தொடக்கத்தில், - தன் கணவனின் காமக் கிழத்தியாகத் தொடர்புகொண்டு, இறுதியில் அவனும் பாராட்டும் பெருங்குல மகளாகி மாண்புற்ற

மாதவியாலும் பாராட்டப்பெற்ற பெரும்பேறும் கண்ணகிக்குக் கிடைத்துளது. -

"கணவன்மார் மறைவுகேட்ட அக்கணமே, தம் உயிர் தாமே பிரிந்துபோகப் பிறவாப் பெருநிலை பெற்ற பத்தினிப் பெண்டிர்களின் பெருமையைக் காட்டிலும் மிஞ்சியது எம் கண்ணகி தேவியின் கற்பு மாண்பு தம் உயிர் தாமே பிரியாதாயினும், கணவரைப் பிரிந்து உயிர் வாழமாட்டாத் தம் பேரன்பு துரத்த, தாமரை மலர்ந்த தண்ணிரிடையே மூழ்குவார் போல் செந்தழலிடை மூழ்கித் தம் உயிரைப் போக்கிக்கொண்டு பிரிவறியாப் பெருநிலைபெற்ற பத்தினிமார் மாண்பினும் மாண்புடையது எம் கண்ணகி தேவியின் கற்பு! தம் உயிரைத் தாமே போக்கிக்கொள்வதும் இயலாதுபோன