பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 & புலவர் கா. கோவிந்தன்

நிலையில், இப்பிறவியில் கிட்டாத உடனுறைவாழ்க்கை, இனிவரும் பிறவியிலாவது வாய்க்குமாக என வேண்டிக் கைம்மை நோன்பு மேற்கொண்டு கற்பு நெறி காக்கும் பத்தினிமார்களின் பண்பட்ட நிலையினும் சாலப் பெருமையுடையது எம் கண்ணகி தேவியின் கற்பு! அவர்கள்போல், தம் உயர்வு ஒன்றே குறியாக உயிரிழந்து போய்விடாது, கள்வன் என்ற குற்றச்சாட்டால் கணவனுக்கு உற்ற கடுந்துயர்மிகு நெடும்பழிதுடைக்கப் பெறாமல் தொடர்ந்து நிற்பது காணப் பொறாளாகி, கண்ணிரும், கையில் தனிச் சிலம்பும் உடையளாய்க் காவலன் முன்சென்று வழக்குரைத்து, கணவற்குற்ற பழிதுடைத்துப் பின்னர் முறைதிறம்பிய முடிவேந்தன் உயிர்முடித்து அக் காவலன் பேரூர் கனையெரி மூட்டிக் கணவற்குத் தான் ஆற்றவேண்டிய கடமையினைக் குறைவறச் செய்துமுடித்த மனநிறைவோடு, அவன் உயிரோடு தன் உயிரும் ஒன்று கலக்க உயிர் நீத்து உயர்வடைந்த மாபெரும் பத்தினியாவள் எம் கண்ணகி!” என, அவள் வழங்கிய பாராட்டுரையின் பெருமையே பெருமை!

தன்ன்ைப் பழி தூற்றவேண்டிய வாய், இதுபோலும் பாராட்டுரையினை வழங்க, அது பெற்ற கண்ணகியின் பெருமையே பெருமை! .w.

"காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி

ஊது உலைக்குருகின் உயிர்த்து அகத்துஅடங்காது இன்உயிர் ஈவர் ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்; நளிஎரி புகாஅராயின், அன்பரோடு -