பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

மாதரி போற்றிய மங்கல மடந்தை

"தென்னவன் தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர்" என்றார் சோழன் நல்உருத்திரன். ஆனிரை காக்கும் தொழிலினராகிய ஆயர்குலத் தலைவனுக்குப் பண்டு வழங்கிய பெயர் கோன் என்பதாம். கோனார் எனும் அப்பெயர், ஆயர்தம் குலப் பெயராக இன்றும் ஆட்சியில் உளது. அரசன் என்ற பொருள்பட வரும் பல சொற்களில் கோன் என்பதும் ஒன்று. ஆனிரைகளே செல்வமாம் எனக் கருதப்பட்ட பண்டைக் காலத்தில், அவ்ஆனிரை காக்க ஒரு தலைவனைத் தேர்ந்து கொண்ட நிலையே, அரச வழியின் தொடக்க நிலையாம் ஆகவே, ஆயர்குலத் தலைவனே ஆதி அரசனாவான் ஆதலின், பாண்டியர் வழிவந்த ஆயர் எனக் கூறுவதினும், ஆயர் வழிவந்த பாண்டியர் எனக் கூறுவதே பொருந்தும்.

ஆயர்குலம், இவ்வாறு பழம்பெருமை வாய்ந்ததோடு, ஆனிரைகளுக்குப் புல்லும் புனலும் . காட்டிக் காத்தலும், அவைதரும் பாலும் மோரும்