பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 33

நெய்யும் ஆகிய நிறைபயன் கொண்டு வாழ்வு நடாத்துதலுமாகிய அருளற வாழ்க்கை நெறி மேற்கொண்ட பெருமையும் உடையதாகும். "ஆகாத்து ஒம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கை ஒர் கொடும்பாடு இல்லை!" எனக் கவுந்தி அடிகளார். பாராட்டுவதும் காண்க.

அத்தகைய ஆயர்குடியில் வந்த மாதரி, அக்குடிப்பிறப்பு தந்த இன்ன பல நலங்களோடு வேறு பல நலங்களையும் பெற்றிருந்தாள். மாதரி ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை வாய்ந்தவளாவள். சமயப்பற்றில், தான் சார்ந்த சமயம் ஒன்றே மெய்ச் சமயம்; பிற எல்லாம் பொய்ச் சமயங்கள் எனக் கருதும் சமய வெறியுடையவள் அல்லள். மாறாக, சமரச சமயநெறி தழுவும் செம்மையுள்ளம் வாய்க்கப் பெற்றிருந்தாள் மாதரி. இயக்கியாம் சிறுதெய்வங்களையும் சிந்தையுருக வணங்குவாள்; திருமாலாம் பெருந்தெய்வத்தின் திருவடிகளையும் மறவாள்; கவுந்தியடிகளாராம் பிறசமயத் தலைவிக்கும் தலைவணங்குவாள். அம்மட்டோ! அத்தெய்வங்கள் ஒவ்வொன்றையும் எவ்வெவ்வாறு வழிபடவேண்டும் என்ற வழிபாட்டு முறையையும் அறிந்திருந்தாள். "புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி” என்ற தொடர், இயக்கிபோலும் சிறு தெய்வங்களுக்குப் பால்மடை கொடுத்தல் வேண்டும் என்பதை உணர்ந்திருந்தாள் மாதரி என்பதையும், "ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்