பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ல் புலவர் கா. கோவிந்தன்

"ஐயம்தீர் காட்சி அடைக்கலம் காத்து ஒம்ப வல்லாதேன் பெற்றேன் மயல், என்று உயிர்நீத்த அவ்வைமகள் இவள்தான்; அம் மணம் பட்டிலா வைஎயிற்று ஐயையைக் கண்டாயோ? தோழி! மாமி மடமகளைக் கண்டாயோ! தோழி!”

பற்றறத் துறந்த பெருஞ் சமயத் தலைவியாம் கவுந்தி அடிகளாராலும், சாத்தனை மணந்த தெய்வப் பெண்ணாம் தேவந்தியாலும் இத்தகைய பாராட்டு களுக்கு உரியளாகிவிட்ட மாதரி, கண்ணகியைத் தன் மனைக்குக் கொண்டு சென்றதும், அவர்தம் பெரு வாழ்வுக்கு, ஆடு மாடுகள் கட்டுண்டு கிடக்கும் - ஆயர்பாடி வீடுகள் ஆகா என உணர்ந்து, புதிய மனையில் குடியேற்றி, கண்ணகியைக் குளிர் புனலில் நீராட்டி, தன் மகள் ஐயையை அவள் அடித்தோழியாக அளித்து, அடிசிலாக்குவதற்கு வேண்டுவ அனைத்தும் வழங்கியதோடு, அழகுக்கு அழகு செய்ய வேண்டா அவள் இயற்கையழகின் பெருமையை, "கூடல் மகளிர் கோலம் கொள்ளும் ஆடகப் பைம்பூண் அருவிலை' அழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர்” என வாயாரப் பாராட்டியதோடு, கோவலனோடு வீற்றிருந்த கண்ணகியை, ஆயர்பாடிக் கண்ணன் துயர் தீர்த்த நம்பின்னையாம் தன் குலதெய்வமாகவே கொண்டு வாழ்த்தினாள் என்றால், அது கண்ணகியின் பெருமைக்கு ஒரு பெரும் சான்று ஆகாதோ?

"ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த н பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ