பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

தேவந்தி வழிபட்ட தெய்வக் கற்பினாள்

"தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதுஎழுவாள்

பெய்எனப் பெய்யும் மழை." -

என்றதனால், கற்புடைய மகளிர்க்குத் தெய்வ வழிபாடு வேண்டுவதில்லை என்பது திருவள்ளுவர் கருத்தாகும் என்று கூறிவிடுதல் கூடாது. கடவுள் வழிபாடு கணவன் வழிபாடு ஆகிய இரண்டனுள், கற்புடையார்க்குச் சிறப்புடையது கணவன் வழிபாடாகும். அக்கணவன் வழிபாட்டில் சென்ற கருத்துடைமையால், கடவுள் வழிபாட்டை ஒரோவழிக் கைவிடினும் கேடில்லை என்பதே அவர் கருத்தாகும். ஆகவே, கடவுளை வழிபடல் அறியாது. கணவனையே வழிபடுவாள் கற்பிற் - சிறந்தவளாவள்; இயற்கையையும் அடக்கிப் பணி கொள்ளும் ஆற்றல் வாய்க்கப்பெற்றவராவள் என்றார். என்றாலும், கணவன் வழிபாட்டிற்கு ஒரு சிறுகுறை தானும் நேர்ாவகையில் கடவுள் வழிபாட்டையும் மேற்கொள்பவள், கணவன் வழிபாடு ஒன்று மட்டுமே ஆற்றுவாளைக் காட்டிலும் சிறப்புடையவளாவள்.