பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 41

அச்சிறப்புடைமையேயல்லாமல், வழிபடத்தக்க கடவுளையே கணவனாகவும் பெற நேர்ந்து, கணவனுக்கு ஆற்றும் வழிபாட்டில், கணவன் வழிபாடு, கடவுள் வழிபாடு ஆக இரண்டையும் ஒருங்கே காணும் பேறுடையவள், சாலப்பெரும் பேறுடையவளாவள். அத்தகைய பேறு வாய்க்கப் பெற்ற பெரியவள் தேவந்தி.

தேவந்தி மணந்துகொண்டது மக்களில் ஒருவனை அன்று; அவள் கணவன், காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில்கொண்டு, அந்நகர்வாழ் மக்களின் வழி பாட்டையும், அந்நகரை நிலக்களமாகக்கொண்டு காப்பியங்கள் ஆக்கிய இருபெரும் புலவர்களின் பாராட்டையும் பெற்ற ஒரு தெய்வமாவன். அத் தெய்வத்தாயே கணவனாகக் கொண்டிருந்தாள் தேவந்தி.

காவிரிப்பூம்பட்டினத்தில் அந்தணர் குலத்தவ ளாகிய மாலதி என்பவள், தன் மாற்றாள் மகவுக்குப் பாலூட்டுங்கால், பால்விக்கி, அம்மகவு மாண்டுபோக, அம்மகவின்ற மர்ற்றாளும் அவள் மணவாளனும், தான் ஏத்துணைதான் கூறினும் நிகழ்ந்தன எற்றுக்கொள்ளாது, அவர் மகவைத் தான், வேண்டுமென்றே கொன்று விட்டதாகக்கொண்டு கொடுமை செய்வரே என்ற அச்ச மிகுதியால், அம்மகவை எப்பாடுபட்டேனும், எவரை அடுத்தேனும் உயிர்ப்பிக்கவேண்டும் என்ற உணர்வோடு, அப்புகார்ப் பெருநகரில் கோயில் கொண்டிருக்கும் அமரர் தருக் கோட்டம், ஐராவதக் கோட்டம், பல தேவன் கோயில், பகலோன் கோயில்,