பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 43

கிடந்த அத்தெய்வ மகவை, மாலதி, தன் மகவெனவே நம்பி எடுத்து மனைகொண்டு சென்றாள். இவ்வாறு மகவுருவாய் மனைபுகுந்த சாத்தன், அந்தன மரபுக்குரிய அருங்கலை பலவும் அறிந்தும், பயின்றும், ஆண்டு நிரம்பப் பெற்ற நிலையில், இறந்த தாய் தந்தையர்க்கு இறுதிக் கடனும் இனிதாற்றி, இறுதியில் தேவந்தியைத் திருமணம் கொண்டு, நாள் சில கழிந்த பின்னர், அவளைத் தன் திருக்கோயிலுக்கு அழைத்து, தன் தெய்வத் திருவுருவைக் காட்டியதோடு, நடந்தன நவின்று, 'ஊரார்க்கும் உறவினர்க்கும் தீர்த்தத்துறை படிந்து வருவான் செல்வேன்போல் செல்கின்றேன்” எனக் கூறி மறைந்து, தெய்வத் திருமேனிகொண்டு விட்டானாக, தீர்த்தத் துறை படியப்போன கணவன் மீண்டு வரப் பாடு கிடக்கின்றாள் என உலகம் எண்ணிக் கிடக்க, பாசண்டச்சாத்தற்கு வழிபாடாற்றும் விழுமியோளாய், வாழ்ந்திருந்தாள் தேவந்தி.

தேவந்தியும் சாத்தனும் உலகத்தார் கண்முன் மனைவியும் கணவனுமாகக் காட்சி தரினும், கணவன் நிலைக்கு அப்பாற்பட்டவன் சாத்தனாதலின், கணவனால் பெறலாகும் இன்பத்தை அச்சாத்தனிடம் பெறுவது தேவந்திக்கு இயலாது. உடலுறு புணர்ச்சி பெற மாட்டாது உள்ளத்துப் புணர்ச்சி ஒன்றில் மட்டுமே உளம் அடங்க வேண்டியதே தான் பெறலாகும் பேறு என்பதை உணர்ந்தும், அதை உலகம் உணரா வகையில் ஒளித்துவைத்து வாழ்ந்திருந்தாள் தேவந்தி, அத்தகைய ஒருத்தியால்தான் கணவனோடு