பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இ புலவர் கா. கோவிந்தன்

கூடி வாழமாட்டாது, தனித்து வாழும் மகளிரின் உள்ளத்துயரை உள்ளவாறு உணர முடியும். மேலும், தேவந்தியோ மக்கள் இனத்தவள்; அவள் கணவனாம் சாத்தனோ கட்புலம் காணாக் கடவுள் நிலையினன். ஆகவே, அவன்பால் இன்பத்தைப் பெறுவது இயலாது என்பதால், தன் இன்ப வேட்கையைக் கைவிடுவது தவிர்த்து தேவந்திக்கு வேறு வழியில்லை யென்பதால், அவள் ஆற்றியிருப்பது அத்துணை அரிய செயலாகாது. ஆனால், கண்ணகியின் கணவனாம் கோவலன் அவ்வாறு எட்டா நிலையில் இருப்பவன் அல்லன். பெண்டிர்க்கு இன்பம் நல்கமாட்டாப் பெருநிலையுடை யானும் அல்லன். மாறாக, பெண்டிர்க்கு இன்பம் நல்கும் பிறவியும் பருவமும் வாய்க்கப்பெற்றவன்; கண்ணகிக்கு மட்டுமே இன்பம் நல்கவேண்டிய உரிமையுடையவன், அவளைக் கைவிட்டதோடு அமையாது, அதே மாநகரில் பிறிது ஒரு பகுதியில் மற்றொருத்திக்கு இன்பம் அளித்து வாழ்ந்து கொண்டிருக்க, அத்துயர நிலையைத் தாங்கிக் கொண்டிருக்கும் கண்ணகியின் பெருநிலையை உணர்ந்தாள் தேவந்தி, பாம்பறியும் பாம்பின.கால்’ என்ப; அவ்வகையால் கோவலனைப் பிரிந்துறையும் கண்ணகியின் துயரநிலையை உணர்ந்த காரணத்தால், அவள் துயர் தீர்க்கும் வழி வகைகளை அவ்வப்போது கண்ணகிக்கு உணர்த்தும், உயிர்த் தோழியாக வாழ்ந்திருந்தாள் தேவந்தி. -