பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் ళ్సీ 45

சாத்தன், தனக்கு இன்பம் தரமாட்டான் எனினும், கண்ணகி கோவலனைப் பெற்று இன்பம் நுகர அருள் பண்ணுதல் கூடும்; அருள் பண்ணுதல் வேண்டும் என விரும்பினாள் தேவந்தி. அதனால், அது தருவான் வேண்டி, அறுகு, சிறுபூளை, நெல் முதலிய தூவிச் சாத்தனை வழிபட்டாள். அவ்வழிபாடு நிறைபயன் நல்கும் என்ற நம்பிக்கையால், கண்ணகியை அணுகி, "கோவலன் வரப்பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வு பெறுவாயாக!” என வாழ்த்தினாள்.

"கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டென்று எண்ணிய நெஞ்சத்து இனையளாய், - நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச், சென்று பெறுக கணவனோடு என்றாள்." - சிலம்பு. 9: 41-44

கண்ணகிக்கு உற்றதோழியாம் நிலையைத் தேவந்தி தேடிப்பெற்றுக் கொண்டைதைப்போலவே, தேவந்தியைத் தன் உயிர்த் தோழியாகக் கண்ணகியும் விரும்பி ஏற்றுக்கொண்டாள். அதனால்தான், கோவலன், தன்னை, உடன்கொண்டு ஒரு மாநகர் புக்கதுபோலவும், அம்மாநகர் மக்கள் பொருந்தாப் பழியுரை ஒன்றை அவர்மேல் ஏற்றிக் கூறியதுபோலவும், அதனால் கோவலனுக்கு ஒரு தீங்கு நேர்ந்ததுபோலவும், அது பொறாது, தான், அம்மாநகர் மன்னன் முன் சென்று முறையிட்டதுபோலவும், அதன் பயனாய் மாநகரும் மன்னனும் கேடுற்றதுபோலவும் தான் கண்ட தீக்கனாவைக் கண்ணகி தன் உற்றார் உறவினர் ஒருவரிடத்தும் உரையாது, தேவந்தியிடம் மட்டுமே