பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒ. புலவர் கா. கோவிந்தன்

உரைத்து மனங்கவன்றனள். கணவன் பிரிவு தந்த கடுந்துயரைத் தன் மாமன் மாமியர்க்கும் காட்டாது மறைத்துவந்த கண்ணகி, தேவந்தியிடத்துத் தான் கண்ட தீக்கனாவையும் கூறி வாய்விட்டுப் புலம்பினாள் என்றால், கண்ணகி, தேவந்திபால் கொண்டிருந்த பாச உண்ர்வை என்னெனப் புகல்வது?

"கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என்கை

பிடித்தனன் போய் ஓர் பெரும்பதியுள் பட்டேம்: பட்ட பதியில் படாததொரு வார்த்தை இட்டனர் ஊரார், இடுதேள் இட்டு என்தன்மேல்; கோவலற்கு உற்றதோர் தீங்கென்று அதுகேட்டுக்

காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்; காவலனோடு ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன்; தீக்குற்றம் போலும் செறிதொடீஇ"

- - சிலம்பு. 9: 45-52

தன்பால் அத்துணைப் பாச உணர்வு

உடையளாகிய கண்ணகியின் துயர்நிலையைக் காணப் பொறாமையினாலேயே, தேவந்தி, அதுதீர,

சாத்தனுக்குத் தான் வழிபாடாற்றியதோடு அமையாது, கண்ணகியும் கடவுளை வழிபடவேண்டும் என விரும்பினாள். கடவுள் வழிபாடாவது, கண்ணகியின் கண்ணிரைத் துடைக்காதா என் ஏங்கிற்று அவள் உள்ளம். அதனால்தான் கணவனை வழிபடுவதல்லது, கடவுளை வழிபட்டறியாள், வழிபட விரும்பாள் கண்ணகி என்பதை அறிந்தும், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் உளவாகிய சோமகுண்ட, சூரிய குண்டத்துறைகளில் படிந்தாடிக் காமவேள் கோட்டம்