பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் $. 47

வலம்வந்து வழிபாடாற்றினால் பிரிந்த கணவரைப் பெறலாகும் என அக்காலப் பெண்டிரிடையே நிலவிவந்த நம்பிக்கையை நினைவூட்டி, கண்ணகி யையும் அவ்வழிபாடாற்றத் துாண்டவும் துணிந்தாள்.

"பொற்றொடீஇ!

கைத்தாயும் அல்லை; கணவற்கு ஒருநோன்பு பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக! உய்த்துக் கடலொடு காவிரி சென்றலைக்கும் முன்றில் மடலவிழ் நெய்தலம் கானல் தடம்உள சோமகுண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு தாம்இன்புறுவர் உலகத்துத் தையலார்: போகம்செய் பூமியினும் போய்ப் பிறப்பர் யாம் ஒருநாள் ஆடுதும்!" - -சிலம்பு. 9: 54-63

கண்ணகி, கோவலனை அடைவான் வேண்டிச் சாத்தனுக்குத் தான் ஆற்றிய வழிபாட்டின் பயனாகவோ அல்லது, கணவனைப் பெறுக என வாழ்த்திய தன் வாழ்த்தின் பயனாகவோ, கண்ணகி கோவலனை அடையப் பெற்றாள் எனினும், அவர்தம் உடனுறை வாழ்க்கையைக் காணும் பேறு தனக்கு வாய்க்காமைக்கு வருந்தினாள் தேவந்தி. அம்மட்டோ! மதுரை நிகழ்ச்சியைக் கேட்டதும், "செய்தவம் இல்லாதேன்; தீக்கனாக் கேட்டநாள் எய்த உணராதிருந்தேன்; மற்று என் செய்தேன்!” என, வாய்விட்டுப் புலம்பினாள். கணவன், பரத்தையர் தொடர்பு காரணமாகச் சிலகாலம் பிரிந்திருந்தமைக்கே அத்துணைப் பெருந்துயர் கொண்டவள், கணவன்