பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இ. புலவர் கா. கோவிந்தன்

மீளாப் பெரும் பிரிவு மேற்கொண்ட நிலையில் எத்துணைக் கொடுந்துயர்க்கு உள்ளாயினளோ எனக் கண்ணகியின் கைம்மை நிலையினை எண்ணி எண்ணிக் கலங்கினாள். அவள் கண்ணிர் துடைக்கும் துணை யாரும் இலரே என்ற ஏக்க உணர்வு உந்த, மதுரைக்கு விரைந்தாள்; ஆனால், அவள் ஆங்கு அடைவதற்குள், கண்ணகி குட்டுவன் கட்டிய கோயிலுள் கடவுள்கோலம் கொண்டுவிட்டாள் என அறிந்து வஞ்சிமாநகர் புகுந்து, அவளுக்கு வழிபாடாற்றும் விழுமிய பணி மேற்கொண்டாள்.

பாட்டன் பாட்டி, தாய் தந்தை, மாமன் மாமி, மக்கள் மருமக்கள், கணவன் என ஒருத்திக்கு உற்றார் பலராயினும், அவர்களுள் நனிமிக நெருங்கிய உறவு ஒன்றே கணவன் உறவு ஆகும். அத்தகைய நெருங்கிய உறவுடைய கணவனாகச் சாத்தனாம் தெய்வத்தையே கொண்ட காரணத்தால், தெய்வங்களின் பண்பும் இயல்பும் யாவை என்பதைத் தெளிவுறத் தெரிந்து கொள்ளும் பெருவாய்ப்பு வாய்க்கப்பெற்றவள் தேவந்தி. அவ்வாறு தெய்வங்களின் பண்பும் இயல்பும் உணர்ந்த ஒருத்தி, கண்ணகியின் தெய்வக் கற்பினைத் தெளிவுறக் கண்டு பாராட்டுகின்றாள் என்றால், அது, கண்ணகி யின் பெருமைக்கு ஒரு பெரும் சான்றாகும் அல்லவோ? மேலும், கடவுள் வடிவில் காட்சி அளித்துவ்ந்த கணவனுக்கு வழிபாடு ஆற்றிவந்த ஒருத்தி அவ் வழிபாட்டைக் கைவிட்டுக் கண்ணகியின் கோயில் அடைந்து, அவளுக்கு வழிபாடாற்றத் தொடங்கி