பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

சிலப்பதிகாரத் தலைவியாம் கண்ணகி மாதர் குலத்திற்கு ஒரு மணி விளக்கு கற்புக்கடம் பூண்டு கடமையாற்றிக் கடவுள் நிலைபெற்ற பெருஞ் சிறப்புடையாள்: இவளுடைய பண்புநலன்கள் ப்ெண்பாலர்க்கு என்றும் எடுத்துக்காட்டாக இலங்குவன. இந் நல்லாளின் பெருமையை அவளுடன் பழகியவர் எல்லாம் நன்கு உணர்ந்து பாராட்டினர். அவள் விண்ணுலகம் சேர்ந்த பின் மன்னரும் போற்றும் மாபெருந் தெய்வமாயினாள். -

யார் யார், எந்தெந்த நிலையில், எவ்வெவ் விகையாக இவளைப் போற்றினர் என்பதனை அழகுற வடித்துத் தருகிறது இவ்வுரைநடைக் கோவை. எனவே, இது மகளிர்க்கும் மற்றையோருக்கும் நம் நாட்டு மாதரார் மாண்புகளை நன்கு உணர உதவும். வள்ளுவர் வகுத்த வாழ்க்கைக் கடமைகளோடு இணைத்து விளக்கும் வகையால் இது வள்ளுவத்திற்கு எடுத்துக்காட்டாகவும். இலங்குகிறது.

இத்தகைய திறனாய்வு நூலை அழகிய தமிழில் வடித்துத்தந்த ஆசிரியப் பெருந்தகை தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் புலவர் கர். கோவிந்தன் அவர்களின் கட்டுரை வன்மை படித்து