பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 51

திகழ்ந்தார்கள். அதனால், காடு கொன்று நாடு கண்டு நகர் அமைத்தகாலை, அகநகரை, வணிகர் வீதி போலும் பெருந்தெருக்களும், வேந்தன் பெருங்கோயில் முதலாம் பெருமாளிகைகளும் மலிந்து ஆரவாரம் மிகுந்ததாக அமைத்த அத்தமிழர்கள், புறநகரை, அறவோர்களும் ஆன்றோர்களும் இருந்து அறம் வளர்க்கும் பள்ளிகளும் பட்டிமண்டபங்களும் மலிந்து அமைதியின் இருப்பிடமாக அமைத்தார்கள். தமிழகத் தின் தலைசிறந்த கடல்துறைப் பட்டினமாகவும், சோணாட்டின் பெருந்தலைநகரமாகவும் திகழ்ந்த புகார் நகரத்துப் பெருமக்கள், புறவாழ்க்கை வளச்செருக்கால் பண்பாடற்றவராகிப் போவதைத் தடுப்பான் வேண்டி, அவர்தம் அகவாழ்வும் வளம்பெற அறவுரையும் அறிவுரையும் வழங்கும் அப்பணி மேற்கொண்டு, அப்புகார் நகரத்துப் புறநகரில் பள்ளி அமைத்துச் சமயப் பணியாற்றிவந்த அறிவு மூதாட்டி ஆவர் கவுந்தி அடிகளார்.

ஐயை எனும் இயற்பெயருடையவராகிய அவர்கள் சமயப் பணிமீது சென்ற மனம் உடைமை யால், மணத்தின்மீது செல்லா மனம் உடைய்வராகி, சமண சமயப் பெண்டிர் இருந்து சமயப் பணி ஆற்றும் நிலையமாம் கவுந்திப் பள்ளி அமைத்துச் சமயத் தொண்டாற்றியதனால் கவுந்தி அடிகளார், கவுந்தி ஐய்ை என அழைக்கப் பெறுவாராயினர்.

கை ஐயக்கடிஞையும், தோள் உறியும் தாங்கிக் கிடக்க, வாழ்வுத் துணையாக, நா ஐந்தெழுத்து