பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இ. புலவர் கா. கோவிந்தன்

மந்திரத்தை ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும் கவுந்தி அடிகளாரின் துறவுக்கோலக் காட்சியை இளங்கோ வடிகளார். இவ்வாறு எடுத்துப் பாராட்டியுள்ளார்:

"தோமறு கடிஞையும் சுவன்மேல் அறுவையும்

காவுந்தி ஐயை கைப் பீலியும் கொண்டு - x , மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆகுஎன:

உணவைக் குறைத்து உடலை வருத்தும் துறவு நிலையின் துய்மை கெடாவகையில் வாழ்ந்து வந்தமையால் நனிமிக மெலிந்துபோன அடிகளாரின் உடற்காட்சியும், அவர்தம் தவவொழுக்க உறுதிப்பாடும் வம்பப்பரத்தர் உள்ளத்தையும் ஈர்க்கும் பெருமை யுடைய வாகும். "நோற்றுணல் வாழ்க்கை நொசிதவத்தீர்” என்ற அவர் பாராட்டுரையினைப் பார்மின் ! ... -

'தவமுதல் காவுந்தி". இது இளங்கோவடிகளார் அளிக்கும் பாராட்டு, "கழிபெரும் சிறப்பின் கவுந்தி: இது சாரணர் வழங்கும் சான்றிதழ். "புண்ணிய முதல்வி" இது வன சாரணியின் வாழ்த்துரை.

இத்துணைப் பாராட்டுகளைப் பெறுமளவு கடுந்துறவு மேற்கொண்டு வாழ்ந்தவராகிய கவுந்தி அடிகளாரின் உணர்வும் ஒழுக்கமும், கண்ணகியையும் அவள் கணவனையும் கண்டது முதல் பெருமளவு மாறி விட்டன. -

"உருவு கண்டு எள்ளாமை வேண்டும்”; "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்”. ஆன்றோர் வழங்கும்