பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் ஆழ் 53

அறவுரைகள் இவை. மக்கள் தம் உருவமைப்பின் நலம், நலம் இன்மைகளில் நாட்டம் செலுத்தவதோ, இன்ன குலம் உயர்ந்தது, இன்ன குலம் தாழ்ந்தது எனக் குல உயர்வு தாழ்வுகளில் கருத்தைப் போக்குவதோ துறவு நிலைக்கு அப்பாற்பட்டது. அடிகளார். இதை உணராதவர் அல்லர். ஆனால், அத்தகைய அடிகளார் உள்ளத்தையும் கண்ணகி, கோவலர்தம் உருவமும் குலமும், தம்பால் ஈர்க்கும் ஆற்றல் உடையவாகி, அவர் வாய் வழங்கும் பாராட்டைப் பெறும் பேறுடைய வாயின. தம்மைக் கண்டு வணங்கிய அவ்விருவரையும்,

"உருவும் குலனும் உயர்பே ரொழுக்கமும்,

பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்!"

எனப் பாராட்டிய அடிகளார் பாராட்டுரையில் அவர்தம் உருவநலம் குலநலங்களையே முதற்கண் குறிப்பிட்டமை காண்க -

துறவுள்ளம் உறவு நிலைக்கு அப்பாற்பட்டது என்ப. துறவிக்குத் தாய் இல்லை; தந்தை இல்லை; மனைவி இல்லை; மக்கள் இல்லை. இவ்வாறு உறவு நிலைக்கு அப்பாற்பட்டதான துறவு நிலையுடையவ ராகிய அடிகளார் உள்ளம், கண்ணகி கோவலர்தம் . தொடர்பு உண்டானதும் அவ்வுறுதிப்பாட்டில் சிறிதே நெகிழ்ந்து, அவ்விருவரையும் தம் மக்களாம் உறவுடையவராகக்கொண்டு மகிழத் துடிக்கிறது. கேட்பார்க்கு, அவர் எம். மக்கள் என வாய்விட்டுக் கூறவும் முன்வந்துவிட்டது. "அடிகளிர்: உம்முடன் வரும் இவ்விருவரும் யாவர்?’ என வம்பப்பரத்தர்