பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அ புலவர் கா. கோவிந்தன்

வினவிய காலத்து, 'என் மக்கள் காணிர்” என உறவு கற்பித்துக் கூறுமளவு அவர் உள்ளம் நெகிழ்ந்துவிட்டது காண்க. ,

கணவனும் மனைவியுமாகக் கூடி வாழ்வதிலும், அறுசுவை உணவினை ஆக்கி உண்பதிலுமே இன்பம் இருப்பதாக எண்ணுவது அறியாமை; அதுவே துன்பத்தின் தொடக்கமாகும் என்று உறுதியாக நம்பித் துறவுநிலை மேற்கொண்ட உரம் மிக்க உள்ளம் படைத்தவராவர் கவுந்தி அடிகளார்.

"பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும்,

உருவி லாளன் ஒறுக்கும் துன்பமும், புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க் கல்லது ஒரு தனி வாழ்க்கை உரவோர்க் கில்லை; பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில் கொண்டோர் உறுரஉம் கொள்ளாத் துன்பம்:

- சிலம். 14 35-40

என்ற அவர்தம் அறவுரையில் அவர் உள்ளம் புலனாவது அறிக. ஆனால், அடிகளாரின் அத்தகைய உள்ளமும், கண்ணகி கோவலர்தம் கணவன் மனைவி. வாழ்க்கையைக் கண்ணுற்றதும், வெறுப்புணர்வு கொள்வதற்கு மாறக, விரும்பி மகிழத் தலைப்பட்டது. வாழ்க்கை நிலை கெட்டு, பிறந்த நாட்டில் வாழமாட்டாது, காட்டு வழிப் போந்து கொடுமையுற நேர்ந்தமை கண்டு, கலங்கிய கோவலனுக்கு ஆறுதல் உரை கூறிய அடிகளார், அவனைப் போலவே தம் நிலை கெட்டுக் காடு புகுந்த இராமனும் நளனும்,