பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஒ. புலவர் கா. கோவிந்தன்

துணைபோகத் துடித்தார். "போதுவல் யானும்; போதுமின்" எனக் கூறிப் புறப்பட்டும் விட்டார்.

அருள் நிரம்பிய உள்ளமும், ஐயம் திரிபறக் கற்ற அறிவும் உடையோராகிய மதுரைவாழ் ஆன்றோர்கள் உரைக்கும் அறவுரை கேட்கும் ஆர்வ மிகுதியால், மதுரைக்குச் செல்லும் மனவேட்கை அடிகளார்க்கு நெடுங்காலமாகவே இருந்துவந்தும், ஒருமுறையேனும் சென்று வந்தாரல்லர். கண்ணகிக்குத் துணைபோக வேண்டும் என்ற துடிப்பினும், ஆன்றோர்தம் அறவுரை கேட்க வேண்டும் என்ற துடிப்பு வலிவுடையதா யிருந்திருப்பின், மதுரைக்கு எப்போதோ சென்றிருப்பர். ஆனால், அதுகாறும் செல்லவில்லை. கண்ணகிக்குத் துணை போகவேண்டும் என்ற துடிப்பு வலிவுடையதாக அவ்வாறு செல்லும் நிலையில் அறவுரை கேட்கும் தம் வேட்கையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும் என்றே எண்ணிச் சென்றார். -

துறவிகள் உடல் இன்பம் அறியாதவர்கள். வெயிலின் வெப்பத்திற்கோ, மழையின் கொடுமைக்கோ, பனியின் கடுமைக்கோ அவர்கள் அஞ்சார். அதற்கு மாறாக, அவற்றின் கொடுமைகளை ஏற்றுத் தாங்கிக்கொள்வதே அவர்க்கு இலக்கணமாம். "உற்ற நோய் நோன்றல் தவத்திற்கு உருவாகும்” என்றார் வள்ளுவர். "மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில் நிலை நிற்றலும், மாரியினும்