பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 57

பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஒம்புதல் தவமாம்” என்றார் பரிமேலழகர். தவத்திற்கு ஒதிய இவ்வியல்பில் கவுந்தி அடிகளார் ஒருசிறிதும் மறந்தவரல்லர்; பற்றறத் துறந்த அடிகளாரின் உரம் மிக்க அவ்வுள்ளமும் கண்ணகி பொருட்டு, "இந்நெறிக்கு ஏதம் தருவன யாங்கும் பல உள” என வழிக் கொடுமை எண்ணி அஞ்சத் தலைப்பட்டுவிட்டது. "கடுங்கதிர் வேனில் இக்காரிகை பொறாஅள் என வேனில் வெப்பம் கண்டு வெதும்புகிறார். "வெயில் நிறம் பொறாஅ மெல்லியல் கண்ணொளி கெடுக்கும் கோடை வெயிலின் கொடுமை கண்டு நடுங்குகிறார். "பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே, உதிர்ந்த மலர்கள் நிறைந்தமையால் மறைப்புண்டு கிடக்கும் வள்ளிக்கிழங்கு அகழ்ந்த குழிகள் கால்களை இடறி இன்னல் தரும்; மரக் கிளைகளில் பழுத்துத் தொங்கும் பலாக் கனிகள் தலையை முட்டித் துன்புறத்தும்; "வயலுழைப் படர்குவம் எனின் வயலில் புரளும் வாளை மீன் காட்சி கண்டு கலங்குவள்” என வழிநடை வருத்தும் எண்ணி வாடுகிறார்.

குணம் என்னும் குன்றேறி நின்றவர்.பால் சினங் கணப்பொழுதுதானும் இடம் பெறுதல் கூடாது. சினம் அற்ற நிலையே சிறந்த துறவு ஆகும்.

"காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக் கெடும் நோய்."