பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஒ புலவர் கா. கோவிந்தன்

எனத் துறவி விடவேண்டிய மூன்றனுள் ஒன்று வெகுளி என வள்ளுவரும் கூறுவது காண்க. துரயதுறவு நிலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிச் சினம் அறியாச் சிறப்புடையவராய் விளங்கிய அடிகளார், கண்ணகி பழிக்கப் பெறுவது கண்ட அளவே, சினம் சேர்ந்தாரைக் கொல்லும் என்பதை அறவே மறந்து விட்டுக் கடுஞ்சினம் கொண்டுவிட்டார். தம் உடன் வரும் கண்ணகியையும் கோவலனையும் சுட்டிக்காட்டி, யார் இவர்?’ என்ற வினாவிற்கு, என் மக்கள் காணிர்! எனத் தாம் கூறிய விடைகேட்டு, ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர் கணவனும் மனைவியுமாதல் உண்டோ” என வம்பப்பரத்தர் எள்ளிநகையாடிக் கூறியது கேட்டுக் கண்ணகி உள்ளம் கலங்கியது காணவே, கவுந்தி அடிகளார், "எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை" என எண்ணிக் கடுஞ்சினம் மிக்கு. "முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆகுக!” எனச் சாபம் இட்டது காண்க -. -

இன்னா செய்தார்க்கும் இனிய செய்தலே சான்றாண்மைக்கு அழகு. இன்னா செய்தார்க்கு அவ்வாறு இனிய செய்யாமை மட்டுமேயல்லாமல் இன்னாதன செய்வதுமாயின், அது சான்றாண்மைக்குச் சான்று பகர்வதாகாது. மாறாக, மாசு கற்பிப்பதாகும்.

"இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு?" என்ற வள்ளுவர் வினாவினைக் காண்க. இன்னா செய்வாரை ஒறுக்காது விட்டால், அவர் மேலும்