பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 59

மேலும் இன்னாதனவே செய்வர்; ஆகவே, அவரை ஒறுத்தல் இன்றியமையாதது என்பது முறையே யாயினும், அவ்வாறு ஒறுத்தலும் அவர் நாண அவர்க்கு நல்லன செய்வதே ஆகும் என்ற உணர்வுவரப் பெற்றவரே உயர்ந்தோராவர். -

"இன்னா செய்தாரை ஒறுத்தர் அவர் நாண

நன்னயம் செய்து விடல்."

என்ற வள்ளுவர் வழக்காறு காண்க. கவுந்தி அடிகளார் இதை அறிவார். தம் வாழ்க்கையிலும் அதைக் கடைப் பிடிப்பவர்தான். ஆனால், அடிகளார் கண்ணகிமீது கொண்ட பாச உணர்வு அவர் அறிவுத் தெளிவை அழித்துவிட்டது. அந்த அறிவைப் பிறர் சுட்டிக் காட்டி நினைப்பூட்டி உபதேசிக்குமளவு மறந்தவராகிவிட்டார். வம்பப்பரத்தரின் வம்புச் சொற்கள் கேட்டுக் கண்ணகி கலங்கி நடுங்குவது கண்ட அளவே பொறுமை இழந்தார்; பெருஞ்சினம் கொண்டார்; சிறியோர் செய்யும் சிறு செயலைப் பெரியோர் பொருட் படுத்துவது கூடாது என்ற உணர்வை இழந்தார். "குறுநரி ஆகுக!” எனச் சாபம் இட்டுவிட்டார். கவுந்தி இட்ட சாபம் தவந்தருசாபம். ஆகவே, வம்பப்பரத்தர்-குறுநரி ஆகிக் கூக்குரல் எழுப்பக் கேட்டுக் கலங்கிய கண்ணகி, அடிகளாரை அணுகி, -

"நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்

அறியாமை என்று அறியல் வேண்டும்."

என அவர் மறந்த அறமுறையை நினைவூட்டிப் பின்னர்,