பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஆழ் புலவர் கா. கோவிந்தன்

"செய்தவத்தீர்! நும் திருமுன் பிழைத்தோர்க்கு

உய்திக் காலம் உரையிரோ?”

என வேண்டிக்கொண்ட பின்னரே அடிகளார் சினம் ஒருவாறு தணிந்தமை காண்க.

தீதும் நன்றும் பிறர்தர வருவதில்லை; துன்பத்தில் உழல்வதும் இன்பத்தில் திளைப்பதும் அத்தன்மையவே. இறப்பு, உலகம் காணாப் புதுமை யுடையதன்று; அதுபோன்றதே பிறப்பும். இவையெல்லாம் பேராற்று வெள்ளத்திடை அகப்பட்ட தெப்பம், தனக்கென ஒரு ஒட்டம் இன்றி, அவ்வெள்ள ஓட்டத்தின்வழி ஒடிஓடி அலைவதுபோல், தீதும் நன்றும், இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும், வாழ்வும் தாழ்வும் முன்னை வினைப்பயத்திற்கேற்பத் தாமே வந்துறுவதல்லது அவரவர் முயற்சியால் வந்துறுவதில; ஆகவே, ஒருவர்தம் உயர்ந்த பெருவாழ்வு கண்டு மகிழ்ந்து அவரைப் பாராட்டுவதோ, ஏனையோர்தம் துன்பச் சுழல் கண்டு வருந்தி அவரை இகழ்வதோ அறிவுடைமை யாகாது என்பது உயர்ந்தோர் கண்ட உண்மைகள். - -

"யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது