பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இ புலவர் கா. கோவிந்தன்

செய்யாமையும், பிறர்க்குத் துன்பம் செய்வதால் தனக்கு இன்பம் வரும் என்பதால் அது செய்வதும் ஆகிய அறங்கோடியவள் ஆகாது, தனக்கு இன்பமே வருமாயினும், அதுபொருட்டுப் பிறர்க்குத் துன்பம் செய்யாமையும், தனக்குத் துன்பமே வருமாயினும், பிறர்க்கு இன்பமே செய்தலுமாகிய அறக்கடன் ஆற்றுபவள்தானா? பிறர்க்கு - இன்பமாவன என அறிந்தவிடத்தும் அது செய்வதால் தனக்கு ஒரு பயனும் இன்மை கருதி, அது செய்யாது விடுக்காது, தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் முன் ஒடிப் பிறர்க்கு உதவும் அருள் உள்ளம் உடையவள்தானா என்றெல்லாம் அடுக்கடுக்காகப் பலப்பலவற்றை ஆராயத் தொடங்கி, அத்தனை வகையாலும் அவள் நல்லவள் என அறிந்த பின்னரே, அவள்பால் கண்ணகியை ஒப்படைக்கத் துணிந்தார். -

எத்தகையவரையும் ஆணையிடவும், ஆணைக்கு அடங்காதாரைச் சபித்து ஒழிக்கவும் வல்ல தவம் வரப்பெற்றவர் அடிகளார். அத்தகைய அடிகளார் தாம் ஆணையிடுவது கண்டு மாதரி, கண்ணகியை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடக் கூடாதே; அவள் மறுப்புக்குத் தம் ஆணை காரணமாக இருந்துவிடக்கூடாதே என்பதால், கண்ணகியை ஏற்றுக்கொள்ளும்ாறு ஆணையிடுவதை விடுத்து, உடையார் முன் இல்லார் போல் நின்று அவளை இரந்து வேண்டிக் கொள்கிறார். தாம் ஒப்படைக்கப் போவது யாரோ ஒரு தகுதியற்றவள்