பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்துத்தும் மாண்புடையாள் ஒ 63

என்பதால் மாதரி மறுத்துவிடக் கூடாதே என்பதால், எடுத்த எடுப்பிலேயே, ஒப்படைக்கப் போகும் கண்ணகியின் ஒப்புயர்வற்ற நிலைமைகளை எடுத்து விளக்கினார். "மண்மகள் அறியா வண்ணச் சீறடிகள் எனக் கண்ணகியின் கால்களின் பெருமை ஒன்றை மட்டுமே கூறி, காலே அத்துணைச் சிறப்புடையவாயின், அவள் தன் பிற உருவ நலங்களைக் கூறவும் வேண்டுமோ என்ற எண்ணம் எழத்தக்க நிலையில் அறிமுகம் தொடங்கினார். கணவன் நலமே தன் நலம்; கணவன் துன்பமே தன் துன்பமாகக் கருதுவதல்லது தனக்கென ஒரு இன்பமோ, துன்பமோ உணராதவள் என, உள்ளத்தால் உயர்ந்த பண்புடையவள் என்றும் எடுத்துக் கூறினார். கடைசியாக, "மாதரி! என்னை வணங்கினாய் நீ; இவ்வாறு உன்னாலும் வணங்கத்தக்க என்னாலும் வணங்கத்தக்கவள் உன்பால் ஒப்படைக்க இருக்கும் இவள்” எனக் கண்ணகியின் தெய்வத்தன்மை சுட்டிக் காட்டினாலாவது மறுக்காது ஏற்றுக்கொள்ள மாட்டாளா எனத் துடித்தது அடிகளார் உள்ளம்.

அடைக்கலப் பொருள் ஆண்டவனாகவே இருக்கட்டும்; அதனால், தனக்கென்ன பயன் என எண்ணி மறுத்துவிடுவளோ மாதரி என்ற ஐயம் அடிகளார் உள்ளத்தில் எழவே, "மாதரி! இவள் ஒரு பத்தினித்தெய்வம்: இவள்போலும் பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில் வானம் பொய்யாது; வளம் குன்றாது; கோன் முறை கோடாது;