பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ဗျိုး புலவர் கா. கோவிந்தன்

"வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது;

நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது; பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு" - சிலம்பு. 15; 145-147 இவ்வாறு பத்தினிப் பெண்டிர் பெருமை பாராட்டு முகத்தான், அத்தகைய பத்தினித் தெய்வம் உன் மனைக்கே வந்து வாழுமாயின், உனக்கு எத்தனையோ நன்மைகள் வந்துறுமே எனக் கூறாமல் கூறவும் செய்தார்.

கொடுக்கப்படும் பொருள் உயர்ந்ததுதான் என்றாலும், அதைக் கொடுப்போர்தம் : பெருமை சிறுமைகளுக்கேற்ப, கொடுக்கப்படும் பொருளின் நிலை உயர்வதும் தாழ்வதும் உண்டு; அவ்வகையிலும் குறையில்லை என்பதை அறிவுறுத்த, கண்ணகி பெருவாழ்வினள், பத்தினிப் பெருந்தெய்வம் என அவள்பாற்பட்ட பெருமைகளை எடுத்துக் கூறியதோடு, அவளை அடைக்கலப்-பொருளாகக் கொடுக்கும் தாம் ஒரு தவமூதாட்டியாகும் எனத் தம் பெருமையினையும் நினைவூட்டினார். • -

கொடுப்போர் தவமூதாட்டியாக இருப்பதால் கொடுக்கப்படும் பொருள் உயர்ந்ததாகிவிடுமா என்ற ஐயவுணர்வும் மாதரிக்கு உண்டாகிவிடக் கூடாதே என்ற ஏக்கத்தால், தவத்தோர் தரும் பொருள் தன்னளவில் சிறிதேயாயினும் மிகப் பெரும் பயன் அளிக்கும் என எடுத்துக் கூறினார்.

"தவத்தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும்,

மிகப் பேரின்பம் தரும்." - சிலம்பு 15; 149-150