பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடையால் அணி செய்வதும் ஆகிய பணிகளை யெல்லாம் யாரோ. சில பணிப் பெண்கள்பால் ஒப்படைத்துவிடாது, ஆயத்தார் செய்யவேண்டிய அத்தனை கடமைகளையும் நீயே ஏற்றுக்கொள்ள வேண்டும்; அக் கடமைகளை ஆற்றும் நிலையில், யாரோ ஒருத்திக்கு யாரோ ஒருவர் கடமை யாற்றும் உணர்வினளாகாமல், உன் மகளுக்குத் தாயாம் நிலையில் இருந்து எப்படிப் புனைந்து பேணுவையோ, அத்தகைய தாய் உணர்வோடு கடனாற்றுதல் வேண்டும்; கடனாற்றும். நிலையில், அவளைப்பற்றி நிற்கும் ஊழ்வினைப் பயத்தான் அவளுக்கு இன்னல்கள் பல நேருமாயின், அவ்வின்னல்களை உனக்கு வந்தனவாகக் கொண்டு தாங்கிக்கொள்ளுதல் வேண்டும்" என்றெல்லாம் கூறி ஒப்படைக்கின்றார்:

"மங்கல மடந்தையை நன்னி ராட்டிக் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டித் தேமென் கூந்தல் சின்மலர் பெய்து துரமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் தாயும் நீயே ஆகித் தாங்கு" -சிலம்பு 15 : 131-136

இவ்வாறு கண்ணகியை மாதரிபால் ஒப்படைக் கும் வகையில் அடிகளார் கண்ணகி பொருட்டு எந்த அளவு தவ உலகைவிட்டு நில உலக உணர்வுடைய வராகிவிடுகிறார் என்பது காண்க - -

மாடலமறையோன், ஆற்றுவியரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் கிடந்தவண்ணப்