பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் ஓ 67

பெருமைகளையும், வேங்கட மலைமீது கோயில் கொண்டிருமக்கும் திருமாலின் நின்றவண்ணப் பெருமைகளையும் கூறியகாலை, அது பொறாது, "காமுறு தெய்வம் கண்டடி பணிய நீ போ” எனப் பிறர் தெய்வ வழிப்பாட்டை வெறுத்தவர் அடிகளார். அத்தகைய அடிகளார் கண்ணகிபொருட்டுக் குறவர் சேரியில் கோயில்கொண்டிருக்கும் சிறு தெய்வமாம் கொற்றவை கோயிலில் தங்கவும், கொற்றவை விழாக் கோலத்தை வெறுப்பின்றிக் காணவும், அவள் பெருமை பாராட்டும் வேட்டுவவரிப் பாடல்களைக் கேட்கவும் செய்தார். அம்மட்டோ!

"ஒருமூன்று அவித்தோன் ஒதிய ஞானத்

திருமொழிக்கு அல்லது என் செவியகம் திறவாது."

- சிலம்பு. 10: 194-195

என்ற அடிகளார், கொற்றவை கோயிலில் தங்கியிருந்த கண்ணகியைக் கண்ணுற்ற சாலினி,

"இவளோ, கொங்கச் செல்வி குடமலையாட்டி: தென் தமிழ்ப் பாவை செய்த தவக் கொழுத்து ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி, - சிலம்பு. 12: 47-50 எனத் தெய்வம் கூற்று உரைத்த புகழ் உரைகளை விரும்பிக் கேட்டுப் பெருமகிழ்வு எய்தினார்.

கண்ணகி புகழை, இவ்வாறு, காதாரக் கேட்டது மட்டுமன்று; -