பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு

நாமம் அல்லது நவிலாது என் நா."

- சிலம்பு. ம் :196-197. என்ற அடிகளார். காம உணர்வுக்கு அடிமைப் பட்டவளான கண்ணகியின் பெருமைகளை வாயாரப் பாராட்டவும் செய்துள்ளார். பாராட்டும் நிலையிலும், கண்ணகியை வெறும் மானிட மகளாகக் கொண்டு பாராட்டாமல், கடவுளாகவே கொண்டு பாராட்டவும் செய்தார். அதுமட்டுமா? கண்ணகியைக் கடவுளாகக் கொண்டு பாராட்டிய அடிகளார், அவளை எண்ணற்ற கடவுளருள் ஒரு கடவுளாகக் கொண்டுவிடாமல், தெய்வம் எனப்படுவாள் கண்ணகி ஒருத்தியே; வேறு தெய்வம் இல்லை எனத் தெய்வத்துள் தெய்வமாகக்

கொண்டு பாராட்டியுள்ளார். : "கற்புக்கடம் பூண்ட இத் தெய்வ மல்லது

பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்."

. - o- சிலம்பு. 15 : {43-144 இது அவர் பாராட்டு.

கவுந்தி அடிகளார், கண்ணகிக்கும் கோவலனுக் கும் வழித் துணையாகவே மதுரை வந்தடைந்தார் என்றாலும், அவர்க்கு, அதுவே சிறப்புடைய காரணமாகாது. மதுரையில் வீற்றிருக்கும் சமண சமயச் சான்றோர்க்ள்பால் அறம் கேட்கவேண்டும் என்ற வேட்கையும் ஒரு காரணமாகும். அது அடிகளாரின் நெடுநாளைய வேட்கையுமாகும். அதை அவரே. கூறியுமுள்ளார்: -