பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

உயர்ந்தோர் ஏத்தும் உரைசால் பத்தினி

66 .

பண்புடையார்ப் பட்டு உண்டு உலகம்” என்றார் வள்ளுவப் பெருந்தகையார்.

"வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே:

நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான" என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். "தமக்கென முயலா நோன்தாள், !

பிறர்க்கென முயலுநர் உண்மையான், உண்டால் அம்ம! இவ்வுலகம்" என்றார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.

இவ்வாறு, உலக நிலைபேற்றிற்கே மூலகாரணமா யிருப்பவர் எனப் போற்றப்படும். அவ்வுயர்ந்தோர் யாவர்? யாது அவர் பண்பு? என்பார்க்கு விளங்க விடையளித்துள்ளார். 'அறன் அறிந்து மூத்த அறிவுடைமை" "உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் பெற்றிமை", இடிக்கும் துணைமை; சிற்றினம் அஞ்சும் சிறப்புடைமை; செப்பமும் நானும்