பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையள் இ 71

ஒருங்குடைமை, ஒழுக்கமும் வாய்மையும் இழுக்காமை; நகை, ஈகை, இன்சொல், இகழாமை; அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாமை, வழங்குவது உள் வீழ்ந்தக்கண்ணும் பண்பில் தலைப்பிரியாமை; சலம் பற்றிச் சால்பில செய்யாமை, இன்றியமையாச் சிறப்பின ஆயினும் குன்றவருபவிடல்; சீர் அல்ல. செய்யாமை; பெருக்கத்துப் பணிவும் சுருக்கத்து உயர்வும்; இகழ்வார்பின் செல்லாமை, ஒட்டார்பின் செலநேரின், அந்நிலையே கெட்டொழிதல்; இளிவரின் வாழா மானம் உடைமை; யார்க்கும் என்றும் பணிதல்; பெருமிதமின்மை அற்றம் ம்றைத்தல்; அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை; பிறர் தீமை சொல்லா நலம்; தோல்வி துலையல்லார்கண்ணும் கோடல்; இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல்; ஊழி பெயரினும் தாம் பெயராமை; அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல்; பிறர் பழியும் தம் பழியும் நாணுதல்-என உயர்ந்தோர்க்கு வள்ளுவர் வகுக்கும் இலக்கணம் ஒன்றல்ல; இரண்டல்ல; இவைபோல்வன எண்ணற்றனவாம்.

இப் பண்புகள் அனைத்தையும் உடையவரே உயர்ந்தோராவர்; அவற்றுள் ஒன்று குறையினும், உயர்வுடைமை அவரைவிட்டு அப்போதே அகன்று விடும்; -- -

"குன்றின் அனையாரும் குன்றுவர், குன்றுவ

குன்றி அனைய செயின்:” - - - குறள், 965