பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 o' புலவர் கா. கோவிந்தன்

என்பது காண்க. ஆக, சிறிதளவு தானும் குறை காணாவாறு குணத்தால் நிறைந்த குன்றென விளங்குவோரே. உயர்ந்தோராவர் எனின், அவ்வுயர்ந் தோர் பாராட்டைப் பெறவேண்டின், அது பெறுவார் எத்துணைப் பெரியவராதல் வேண்டும்? "உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலை உணர்த்தவே, நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்கிறார் இளங்கோவடிகளார். அவ்வாறே, உயர்ந்தோர் பலரின் பாட்டைப் பெறும் பெருநிலை பெற்றவள் கண்ணகி. அவளைப் பாராட்டிய அவ்வுயர்ந்தோர் பலரும், ஒவ்வொரு வகையால் உயர்ந்தோராவர். அவர்தம் உயர்வையும், அவர்கள் அவளுக்கு அளித்த பாராட் டினையும் பார்ப்போமாக - -

1. இளங்கோவடிகளார்

. குமரியொடு வடஇமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனாம் தம் தந்தையோடும், கடலிடையே வாழ்வோராம் கடம்பரை வென்று அழித்த காரணத்தால் கடல் பிறக்கு ஒட்டியவன் என அழைக்கப்பெறும் செங்குட்டுவனாம் தம் தமையனோடும் அரசவைக்கண் வீற்றிருந்தபோது, ஆங்குவந்த நிமித்திகன், தந்தைக்குப் பின்னர், தனியரச வாழ்வு தமக்கே உண்டு எனக் கூறியது கேட்டு முன்னவன் முகம் ஒளி குன்றியது கண்டு, "முன்னோன் இருக்கப் பின்னவன் அரசுரிமையடைவது அரசமுறை யாகாது; அதற்கு விதியே வழி வகுப்பதாயிருப்பினும்,