பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் $ 73

அவ்விதி முறையை மாற்றி வேந்தர் முறையை வாழச் செய்வேன்; அரசாள் உரிமை எனக்கே உரித்து எனக் கூறும் அவ்விதி யாணையை என் மதியாற்றலால் மாற்றுவேன்; இச் சேரர் அரியணையில் என்றும் அமரேன்: அரியணையில் அமரேன் என்பது மட்டு மன்று; அரச வாழ்வும் வேண்டேன்!” என வஞ்சினம் உரைத்து, உரைத்த அப்பகலே, அரசவையும், அரண் மனையும் விட்டு வெளியேறி, குணவாயிற் கோட்டம் அடைந்து துறவற வாழ்வு மேற்கொண்டு, இளங்கோ வேந்தன் எனும் பெயர் மறைய, இளங்கோவடிகள் எனும் பெயர் வாழப் பெருநிலை பெற்ற பெரியவர் இளங்கோவடிகள் ஆவர். -

தன் குடியினும் பிற குடிகள் தலைசிறந்து வாழ்தல் கூடாது; மாறாக, தன் குடிக்கு அடங்கி ஏவல் புரியும் தாழ்நிலையிலேயே கிடந்துழல வேண்டும் என்ற உணர்வே முனைந்து நிற்க, ஒருவரோடொருவர் ஒயாப் போர் மேற்கொள்ளும் மூவேந்தர் குடியில் வந்தும், தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில், அம் மூவேந்தர் பெருமைகளை, முறைமை கொடாது ஒன்றிற்கொன்று வேறுபடா வகையில் ஒத்த உயர்வே காட்டிப் போற்றிப் புகழந்து, -

"முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது

அடிகாள்: நீரே அருளுக" - சிலம்பு பதிகம், 61-62. என்ற சாத்தனார் அவர்களின் உள்ள வேட்கையை உள்ளவாறு நிறைவேற்றித் தந்ததோடு, சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரால், "இக்காப்பியம்