பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இ. புலவர் கா. கோவிந்தன்

செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேர முனியாகும்" எனச் சிறப்பிக்கவும் பெற்றவர் இளங்கோவடிகளாவர்.

வேந்தர்களையும் வேந்தர்களுக்கு நிகரான வேளிர் குலத் தலைவர்களையும் பாராட்டிப் பாக்கள் புனைவதே வழக்கமாக வந்த காலத்தில் முதன் முதலான, மன்னர்க்கு அடங்கிய ஒரு குடிமகளைப் பற்றிய ஒரு பெருங்காப்பியமே பாடிய மாண்புமிகு மக்கட் புலவராவர் இளங்கோவடிகளார். -

இறவாப் பேரின்பம் பயப்பது துறவறம் ஒன்றே என்பதை உயிர்க்கொள்கையாகக் கொண்ட சமயத்தவ ராய்த் துறவற நெறியை நனி இளமைப் பருவத்திலேயே மேற்கொண்ட இளங்கோவடிகளார் உள்ளத்தில் உயர்ந்த ஓர் இடத்தை, இல்லற நிலையினளாய் அதிலும், கணவன் அன்பை முழுமையும் பெறத் தவறிய இல்லறத்தவளாய தன்னால் பெற முடிந்தது என்றால், அது கண்ணகிக்குப் பெறற்கரிய பெருஞ் சிறப்பாம் அன்றோ? .

சிலப்பதிகாரம் பாட முன்வந்த இளங்கோவடி களார், காப்பியத் தலைவியாகக் கண்ணகியையே கொண்டு, அக்காப்பியத்துள் வரும் ஏனையோர் அனைவரினும் நனிமிக உயர்ந்தவளாகவே படைத் துள்ளார். கண்ணகியையும் அவள் கணவன் கோவ லனையும் அறிமுகப்படுத்தும் மங்கல வாழ்த்துப் பாடலாம் முதற் காதையில் கண்ணகியைப் புகழ் ஏணியின் உச்சிக்கே கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.