பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 75

கவிக் கூற்றாகக் கண்ணகியைக் குறிப்பிடும் போதெல்லாம், "சாலி ஒருமீன் தகையாள். அருந்ததி அன்னாள்," என்றும், "உரைசால் பத்தினி," "பொருவறு பத்தினி," "திருமா பத்தினி” என்றும் அவள் கற்பு மேம்பாடு தோன்றவும், "மாசில் கற்பின் மனைவி,” "வடுநீங்கு சிறப்பின் தன்மனை, "மங்கல மடந்தை" என்று அவள் மனைமாட்சியின் மாண்பு மணக்கவும்,

"கடுங்கதிர் வெம்மையின் காதலன் தனக்கு

நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித்

தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி"

- - சிலம்பு. 15:139-141

எனத் தன்னைக் காத்துக் கொள்வதினும் தன்னைக் கொண்டானைப் பேணும் தகைமை தோன்றவும் குறிப்பிட்டுப் பாராட்டிச் சென்றுள்ளார்.

கடுங்கதிர் வேனிற்போதில் பாலைப் படுவழியில் நடந்து வந்ததால் கண்ணகியின் கால் கொப்புளித்த கொடுமை கண்டு, இளங்கொடிபோலும் இவள் வண்ணச் சீறடியின் மென்மையை மண்மகள் அறிந்திலளே,

"என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்.”*

- - சிலம்பு. 15 , 137-138

என மண்மகளை நொந்து கொள்கிறார்.

கணவனோடிருந்து மனையறம் நடத்தமாட்டாமை யால் பெற்ற மனக்கலக்கத்தால் தன்னை ஒப்பனை