பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் é. 77

2. சீத்தலைச் சாத்தனார்

மதுரையில் இடம்பெற்ற கடைச் சங்கத்தில் இருந்து, முத்தமிழ் வளர்த்த முதுபெரும் புலவர்களுள், கபிலர் பரணர் நக்கீரர் முதலாம் பெரும் புலவர் வரிசையுள் வைத்து மதிக்கத்தக்கவர் சீத்தலைச்.

சாத்தனார். - .

கண்ணகி தேவியின் . வரலாற்றைச் சேரன் செங்குட்டுவனுக்கு விளங்க உரைத்து, அவளுக்குக் கற்கோயில் அமையக் காரணமாயிருந்ததோடு, அவள் வரலாற்றை இளங்கோவடிகளார்க்கும் உரைத்து, அவளுக்கு அழியாக் கலைக்கோயில் அமையவும் காரணமாயிருந்தவர் நம் சாத்தனார்.

"யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை."

எனப் பாராட்டப் பெறும் புலவர் பெருமானாகிய இளங்கோவடிகளாரால் "தண்டமிழ்ச் சாத்தன்", "தண்டமிழ் ஆசான் சாத்தன்", "நன்னூற் புலவன்" என வாயார வாழ்த்திப் பாராட்டப்பெறும் பெரும் புலவர் நம் சாத்தனார்.

கண்ணகி வரலாற்றின் தொடர் நிகழ்ச்சிகளாகிய மாதவி துறவு, மணிமேகலை துறவுகளைக் காப்பியப் பொருளாகக் கொண்ட மணிமேகலை பாடிச் சிலப்பதி காரத்திற்குத் துணை நூல் கண்டவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். -