பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இ. புலவர் கா. கோவிந்தன்

கண்ணகி வரலாறு பாடிய இளங்கோவடிகளார் கண்ணகியை நேரில் கண்டவரோ, அவர் வரலாற்றை நேரில் அறந்தவரோ அல்லர். அவருக்குக் கிட்டாத அப்பேறு, நம் சாத்தனாருக்கு வாய்த்தது. கண்ணகியின் தெய்வத் திருவுருவை நேரில் காணவும், அவள் முன் பணிந்த நிலையில் நின்று, மதுரை மாதெய்வம் அவள் பழம்பிறப்பின் வரலாற்றை எடுத்துரைத்ததைக் கேட்கவும் பேறுபெற்றவர் நம் சாத்தனார். - கற்புடை மகளிரின் மாண்பினைப் பாடற் பொருளாகக் கொண்டு பெருங்காப்பியம் செய்ததோடு, அவர் பெருமை பாடும் வள்ளுவப் பெருந்தகையாரின் பொருள் மொழி ஒன்றைத்,

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை."

எனத் தம் பாவிடை வைத்துப் பொன்னேபோல் போற்றிய பெரியவர் நம் சாத்தனார்.

இவ்வுளவு பெருமைக்கு உரியவராகிய சாத்தனா

- ராலும் கண்ணகி பாராட்டப் பெற்றுள்ளாள். "வானம் துளங்கிய போதும் மண் கம்பமாகிய போதும் நிலை

குலைந்து போகாத நான்மாடக் கூடலைப் பெரு

நெருப்புண்ணப் பண்ணியவள் கண்ணகி, ஆனால்,

அதுகொண்டு பல்லோர் பழியுரை மேற்கொள்வதற்கு மாறாகப் புகழ்ந்துரைக்கப் பெற்ற பத்தினிப் பெருந் தெய்வமாவள்’ எனச் சாத்தனார் அவளைப் பாராட்டி